Skip to content

சொல் பொருள்

(பெ) 1. மறத்தல், 2. கவனக்குறைவு, 3. அசட்டை செய்தல், புறக்கணித்தல், நீங்குதல்,

சொல் பொருள் விளக்கம்

மறத்தல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

failing to remember, carelessness, absent-mindedness, overlooking, disregarding, getting rid of

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மறப்பு அரும் காதலி ஒழிய
இறப்பல் என்பது ஈண்டு இளமைக்கு முடிவே – குறு 151/4,5

மறத்தல் என்பது அரியதான காதலியை விட்டுப்பிரிந்து
செல்வேன் என்று சொல்வது இங்கு நம் இளமைக்கு இறுதியாகும்.

யாய் மறப்பு அறியா மடந்தை – நற் 301/8

எமது தாயின் கவனத்தைவிட்டுச் சிறிதும் அகலாத மடந்தை,

தேம் மறப்பு அறியா கமழ் கூந்தலளே – நற் 301/9

அகிலின் நெய்ப்பூச்சு நீங்குதல் இல்லாத மணங்கமழ்கின்ற கூந்தலையுடையவள்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *