சொல் பொருள்
(பெ) 1. வீரர், 2. பாலை நில மக்கள், 3. கொடியோர் 4. வேடுவர்,
சொல் பொருள் விளக்கம்
வீரர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
brave men, warriors, inhabitants of the desert tract, cruel, wicked persons, persons of hunters tribe
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுரும்பு ஆர் கண்ணி பெரும் புகல் மறவர் கடும் களிறு ஓட்டலின் – மது 596,597 வண்டுகள் நிறைந்த போர்ப்பூவினையும், பெரிய விருப்பத்தையுமுடைய வீரர்கள் கடிய களிறுகளை (ஒன்றோடொன்று பொருமாறு)செலுத்துதலால், புறவு அணி கொண்ட பூ நாறு கடத்து இடை கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர் – நற் 48/5,6 காட்டினை அழகுசெய்த பூவின் மணம் கமழும் கற்கள் பரந்த வழியில் ‘கிடின்’ என்று ஒலிக்கும்படி மோதிக்கொள்ளும் திரண்ட தோள்வளை அணிந்த பாலைமக்கள் விழு தொடை மறவர் வில் இட தொலைந்தோர் எழுத்து உடை நடுகல் அன்ன – ஐங் 352/1,2 சிறப்பாக அம்பினைத் தொடுப்பதில் வல்ல கொடிய மறவர்கள் வில்லால் எய்ய, இறந்துபட்டோரின் பெயர் பொறித்த எழுத்துகளைக் கொண்ட நடுகல்லைப் போன்று தினை கள் உண்ட தெறி கோல் மறவர் விசைத்த வில்லர் வேட்டம் போகி முல்லை படப்பை புல்வாய் கெண்டும் காமர் புறவினதுவே – அகம் 284/8-11 தினையினால் ஆக்கிய கள்ளினை உண்ட நாணினைத் தெறித்து விடுக்கும் அம்பினையுடைய மறவர்கள் வேகமாக இழுத்து நாண் புட்டிய வில்லினராய் வேட்டையாடி முல்லைநிலத் தோட்டத்தே மானை அறுத்து உண்ணும் அழகிய காட்டின்கண்ணது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்