சொல் பொருள்
(பெ) திருப்பித்தருதல்,
சொல் பொருள் விளக்கம்
திருப்பித்தருதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
returning, giving back
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம் அ நலம் பயலையால் உணப்பட்டு பண்டை நீர் ஒழிந்த_கால் பொய் அற்ற கேள்வியால் புரையோரை படர்ந்து நீ மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ – கலி 15/12-15 அசோக மரத்தின் அழகிய தளிரைப் போன்றது இவளின் எழில் நலம், அந்த நலம் பசலை நோயால் பாழடிக்கப்பட்டு அதன் பண்டைய இயல்பு அழிந்தபோது – பொய்யற்ற கேள்வியறிவால் உயர்ந்த சான்றோரைச் சார்ந்து நீ பெறப்பொகும் மாசற்ற நோன்புநெறிகளால் திருப்பித்தர முடியுமா?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்