சொல் பொருள்
(பெ) மறுசொல், பதில்,
சொல் பொருள் விளக்கம்
மறுசொல், பதில்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
reply, answer
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆடு வரி அலவன் ஓடு_வயின் ஆற்றாது அசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறு_மகட்கு உயவினென் சென்று யான் உள் நோய் உரைப்ப மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் – நற் 106/3-6 அங்குமிங்கும் அலைந்துதிரியும் புள்ளிகளைக் கொண்ட நண்டுகள் ஓடுவனவற்றைப் பிடிக்க மாட்டாது சோர்வுற்று அதன் மீது விருப்பம் நீங்கிய குற்றமற்ற சிறுமகளுக்காக வருத்தமுற்றவனாய் அவளிடம் சென்று நான் எனது உள்ளத்துக் காமநோயைப் பற்றிக் கூற அதற்கு மறுசொல் சொல்வதற்கும் முடியாதவளாய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்