Skip to content

சொல் பொருள்

(வி) 1. மனம் கலங்கு(தல்), 2. சுழலு, சுற்றிச்சுற்றி வா,

சொல் பொருள் விளக்கம்

மனம் கலங்கு(தல்),

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be distressed, whirl, run around

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கணம்_கொள் அருவி கான் கெழு நாடன்
மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல்
இது என அறியா மறுவரல் பொழுதில் – அகம் 22/2-4

திரண்ட நீர் உள்ள அருவிகளை உடைய காடுகள் நிறைந்த நாட்டைச் சேர்ந்த தலைவனின்
மணங் கமழும் அகன்ற மார்பைத் தழுவியதால் ஏற்பட்ட துன்பத்தை,
இன்னது என்று அறியாமல் (தாய்) மனக்கலக்கம் அடைந்த போழ்து,

காலை எழுந்து கடும் தேர் பண்ணி
வால் இழை மகளிர் தழீஇய சென்ற
மல்லல் ஊரன் எல்லினன் பெரிது என
மறுவரும் சிறுவன் தாயே – குறு 45/1-4

காலையில் எழுந்து, வலிமையான தனது தேரைப்பூட்டி
ஒளிவிடும் அணிகலன்களை அணிந்த மகளிரைத் தழுவுவதற்குச் சென்ற
வளமிக்க ஊரனாகிய தலைவன் ஒப்பனையுடன் நன்கு விளங்கினான் என்று
மனம் கலங்குகின்றாள் சிறுவனின் தாய்!

முழந்தாள் இரும் பிடி கயம் தலை குழவி
நறவு மலி பாக்கத்து குற_மகள் ஈன்ற
குறி இறை புதல்வரொடு மறுவந்து ஓடி
முன்_நாள் இனியது ஆகி – குறு 394/1-4

முழந்தாளையுடைய கரிய பெண்யானையின் மெல்லிய தலையையுடைய கன்று
கள் மிகுதியாக உள்ள பாக்கத்தில் உள்ள குறத்தி ஈன்ற
குட்டையான கைகளையுடைய புதல்வரோடு சுற்றிச்சுற்றி ஓடி,
முற்காலத்தில் இனியதாக இருந்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *