சொல் பொருள்
(வி) 1. பூவின் மொட்டு விரி, 2. விரிந்து அகலு, 3. தோன்று, 4. வாய்ப்புறம் மேலாக நிமிரச்செய்,
(பெ) 1. பூ, 2. அகற்சி,
சொல் பொருள் விளக்கம்
பூவின் மொட்டு விரி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
open, as a flower; to bloom, be wide open, appear, turn the face or mouth upward, as of a pot, full blown flower, breadth
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர் – திரு 75 கண்ணைப்போன்று விரிந்த விருப்பம் மருவின சுனைப் பூக்களில், மலர திறந்த வாயில் பலர் உண – குறி 203 அகலத் திறந்துகிடக்கின்ற வாயிலில் (வந்து)பலரும் உண்ணும்படி, முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும் இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும் ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும் தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும் – சிறு 231-234 முதியோர்க்குக் குவித்த கைகளையுடையோய்’ என்றும், ‘வீரர்க்குத் திறந்த மார்பை உடையோய்’ எனவும், ‘உழவர்க்கு நிழல்செய்த செங்கோலையுடையோய்’ எனவும், ‘தேரினையுடையோர்க்கு வெம்மைசெய்த வேலினையுடையோய்’ எனவும், மா கண் மலர்ந்த முலையள் தன்னையும் – புறம் 352/14 கரிய கண் தோன்றிய முலையையுடையளாயினாள் தமையனும் அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும் கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின் – புறம் 393/4,5 சோறு சமைத்தற்கண் உள்ள விருப்பத்தை மறந்த எம்முடைய மட்பானையை நிமிர்த்துச் சமைக்கச்செய்யும் பரவுக்கடனை அறிந்தாளும் செல்வர் பிற நாட்டிலும் இல்லாராதலால் கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர் – திரு 75 கண்ணைப்போன்று விரிந்த விருப்பம் மருவின சுனைப் பூக்களில், மலர் தலை உலகத்துள்ளும் பலர் தொழ விழவு மேம்பட்ட பழ விறல் மூதூர் – பெரும் 410,411 அகன்ற இடத்தையுடைய உலகத்து நகரங்களினுள்ளும், பலரும் தொழும்படி, விழாக்களால் மேம்பட்ட பழைய வெற்றிச்சிறப்பையும் உடைய காஞ்சிநகர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்