Skip to content

சொல் பொருள்

(வி) நிறைவாக இரு(த்தல்),

சொல் பொருள் விளக்கம்

நிறைவாக இரு(த்தல்),

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be full, plenty

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கடும் பகட்டு யானை நெடும் தேர் செழியன்
மலை புரை நெடு நகர் கூடல் ஆடிய
மலிதரு கம்பலை போல – அகம் 296/11-13

கடிய பெரிய யானையினையும் நெடிய தேரினையும் உடைய பாண்டியன் நெடுஞ்செழியன்
 மலையைஒத்த நீண்ட கோயிலையுடைய மதுரைக்கண் வெற்றிக்களிப்பால் ஆடும்போது
 நிறைவாக எழுந்த ஆரவாரம் போல

பூத்த புகையும் அவியும் புலராமை
மறாஅற்க வானம் மலிதந்து நீத்தம்
வறாஅற்க வைகை நினக்கு – பரி 16/53-55

பொலிவுற்ற அகிற்புகையும், பலியுணவும், குறையாமலிருக்கும்பொருட்டு
மறவாதிருக்கட்டும் வானம், மிகுந்த பெருக்கினைத் தந்து வெள்ளம்
வற்றாது இருக்கட்டும் வையையே உனக்கு.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *