சொல் பொருள்
(வி) 1. வழிந்தோடும்படி நிரம்பு, பெருக்கெடு, 2. நீர் முதலியன ஒழுகு, கசி, 3. பயின்று வா
சொல் பொருள் விளக்கம்
வழிந்தோடும்படி நிரம்பு, பெருக்கெடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
flood, flow, leak, drop, come frequently
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்து கிளி போல் காய கிளை துணர் வடித்து புளி_பதன் அமைத்த புது குட மலிர் நிறை – அகம் 37/7-9 காற்றால் கிளைத்த கொழுவிய தளிர்களையுடைய மாமரத்தில் கிளி(மூக்கு) போன்ற காய்களைக் கொண்ட கிளை(யில் தொங்கும்) கொத்துக்களைச் சாறெடுத்து, புளிப்புச் சுவை சேர்த்துப் புதுக்குடங்களில் விளிம்புதட்ட நிறைத்ததை, நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை – குறு 99/4 உயர்ந்த மரத்தின் உச்சிக் கிளைகளைத் தொட்டுக்கொள்ளப் பெருக்கெடுத்த வெள்ளம் அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த ஈர் மணல் மலிர் நெறி சிதைய இழுமென உரும் இசை புணரி உடைதரும் துறைவற்கு – குறு 351/2-4 வளையில் வாழும் நண்டு தன் கூர்மையான நகத்தால் கீறிய ஈரமான மணலையுடைய நீரொழுகும் வழி சிதைந்துபோகும்படி, இழும் என்று இடியோசை போன்ற முழக்கத்தையுடைய அலைகள் உடைக்கும் கடல்துறைத் தலைவனுக்கு வையை உடைந்த மடை அடைத்த_கண்ணும் பின்னும் மலிரும் பிசிர் போல இன்னும் அனற்றினை – பரி 6/82-84 வையையில் உடைந்த மடையை அடைத்தபோதும், மீண்டும் ஒழுகும் கசிவுநீர் போல, இங்கு வந்த பின்னும் அவரை வெம்மையுறச் செய்தாய்! துனியல் மலர் உண்கண் சொல் வேறு நாற்றம் கனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னது – பரி 8/53,54 பெரிதும் வருந்தாதே! மலர் போன்ற மையுண்ட கண்களையுடையவளே! நீ சொல்வது உண்மை அன்று; இந்த மணம் பழங்களிலும், மலர்களிலும், பயின்றுவந்த காற்றினால் அடித்துக்கொண்டுவந்ததாலும் உண்டானது,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்