சொல் பொருள்
மலையின் அடிவாரம், கொசுக்கடி
சொல் பொருள் விளக்கம்
மலையின் அடிவாரத்தைக் குறிப்பது பொது வழக்கு. மலையடிக் குறிச்சி என ஊர்ப் பெயரும் உண்டு. திண்டுக்கல் வட்டாரத்தில் மலையடி என்பது கொசுக்கடி என்னும் பொருளில் வழங்குகின்றது. கொசுவால் மலேரியா என்னும் தொற்றுக் காய்ச்சல் உண்டாவதும், காய்ச்சல் அடிக்கிறது என்னும் வழக்கும் நோக்கச் செய்கிறது இம் மலையடி.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இது ஒரு திண்டுக்கல் வட்டார வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்