Skip to content

சொல் பொருள்

(வி) 1. கத்தி முதலியன கூர்மை கெடு, 2. ஒளி குறை, 3. தேய்வுறு, 

4. அறிவின் கூர்மை, உணர்வாற்றல், உள்ள உறுதிப்பாடு முதலியன குறைவாகு,

சொல் பொருள் விளக்கம்

கத்தி முதலியன கூர்மை கெடு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

become blunt as edge or point of a weapon, become dim, obscure, become worn out, lose keenness of intellect or determination

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம் – பெரும் 119

கூரிய முனை மழுங்கின புலால் நாறும் வாயையுடைய வேல்களை

ஒண் சுடர் உருப்பு ஒளி மழுங்க சினம் தணிந்து
சென்ற ஞாயிறு நன் பகல் கொண்டு
குட முதல் குன்றம் சேர – மது 545-547

ஒள்ளிய கதிர்களின் வெப்பமும் ஒளியும் குன்ற, சினம் குறைந்து,
(மேற்றிசையில்)சென்ற ஞாயிறு நல்ல பகற்பொழுதைச் சேரக்கொண்டு,
மேற்கு அடிவானத்தில் மலையினைச் சேர,

கொல்லை உழு கொழு ஏய்ப்ப பல்லே
எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி
உயிர்ப்பிடம் பெறாஅது ஊண் முனிந்து – பொரு 117-119

கொல்லை நிலத்தில் உழுத கொழுப் போன்று, (எம்)பற்கள்
பகலும் இரவும் இறைச்சியைத் தின்று தேய்வுற்று,
மூச்சு விடுவதற்கும் இடம்பெறாமையால், அவ்வுணவுகளை வெறுத்து,

உரவு தகை மழுங்கி தன் இடும்பையால் ஒருவனை
இரப்பவன் நெஞ்சம் போல் புல்லென்று புறம்மாறி
கரப்பவன் நெஞ்சம் போல் மரம் எல்லாம் இலை கூம்ப – கலி 120/4-6

தன் உள்ள உறுதியின் மேன்மை தேயும்படியாக, தனக்கு வந்த வறுமையினால் ஒருவனை
இரந்துகேட்பவனின் நெஞ்சம் போல பொலிவிழந்து தோற்றத்தில் தொய்வுபட்டு,
இரப்பவனைக் கண்டு மறைந்துகொள்பவன் நெஞ்சம் போல மரம் எல்லாம் இலைகள் எல்லாம் குவிந்துபோக,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *