சொல் பொருள்
(பெ) 1. குற்றம், 2. தூசு, அழுக்கு, தூய்மைக்கேடு, 3. களங்கம்,
சொல் பொருள் விளக்கம்
1. குற்றம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fault, defect, dirt, stain, blot, spot
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க – திரு 147 குற்றமில்லாத மகளிரோடு கறை இன்றி விளங்க வலம்புரி புரையும் வால் நரை முடியினர் மாசு அற இமைக்கும் உருவினர் – திரு 127,128 வலம்புரிச்சங்கினை ஒத்த வெண்மையான நரைமுடியினை உடையவரும், அழுக்கு அற மின்னும் உருவினரும் புகை முகந்து அன்ன மாசு இல் தூ உடை – திரு 138 புகையை முகந்துகொண்டதைப் போன்ற அழுக்கேறாத தூய உடையினையும் மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து – சிறு 157 திங்கள் ஏக்கமுறுகின்ற களங்கமற்ற அமைதியினையுடைய முகத்தினையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்