சொல் பொருள்
(பெ) 1. மகிமை, மாண்பு, பெருஞ்சிறப்பு, 2. அழகு, 3. இயல்பு, தன்மை,
சொல் பொருள் விளக்கம்
மகிமை, மாண்பு, பெருஞ்சிறப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Glory, greatness, magnificence, splendour, majesty, loveliness, beauty, nature
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடு வெள் ஊசி நெடு வசி பரந்த வடு வாழ் மார்பின் அம்பு சேர் உடம்பினர் சேர்ந்தோர் அல்லது தும்பை சூடாது மலைந்த மாட்சி அன்னோர் பெரும நன்_நுதல் கணவ – பதி 42/3-7 நெடிய வெண்மையான ஊசி நீண்ட பிளவினில் தைத்த தழும்பு இருக்கின்ற மார்பினைக் கொண்ட, அம்புகள் தைத்த உடம்பினையுடையவராய்ப் போரிட வந்தவரோடு அல்லாமல், மற்றவரோடு தும்பை மாலை சூடிப் போரிடாமல், மேற்சொன்னவரோடு மட்டும் போர்செய்யும் மாட்சியையுடைய அத்தகையவருக்குத் தலைவனே! நல்ல நெற்றியையுடைவளுக்குக் கணவனே! நூலோர் புகழ்ந்த மாட்சிய மால் கடல் வளை கண்டு அன்ன வால் உளை புரவி – பெரும் 487,488 (குதிரை இலக்கண)நூல்கற்றோர் புகழ்ந்த மாண்புடையனவாய், திருமாலின் பாற்கடலில் சங்கைக் கண்டாற் போன்ற வெண்மையான தலையிறகுகளை உடைய குதிரைகள் காணுநர் கைபுடைத்து இரங்க மாணா மாட்சிய மாண்டன பலவே – பதி 19/26,27 காண்போர் கைகொட்டிப் பிசைந்து வருந்த கெட்டழிந்த தன்மையுடையவாயின, பலவகையாலும் மாட்சிமையுற்றிருந்த இந் நாடுகள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்