சொல் பொருள்
(பெ) ஆங்காங்கு, இடந்தோறும்,
சொல் பொருள் விளக்கம்
ஆங்காங்கு, இடந்தோறும்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
every place
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாட்டுமாட்டு ஓடி மகளிர் தர_தர பூட்டு மான் திண் தேர் புடைத்த மறுகு எல்லாம் பாட்டு ஆதல் சான்ற நின் மாய பரத்தைமை காட்டிய வந்தமை கைப்படுத்தேன் – கலி 98/4-7 அங்கேயும் இங்கேயும் ஓடிச் சென்று மங்கையரைக் கொண்டுவந்துகொண்டேயிருக்க, எந்நேரமும் பூட்டியபடியே இருக்கும் உன் திண்ணிய தேர் ஓடுகின்ற தெருக்களிலெல்லாம் உன்னைப் பற்றிய பேச்சுத்தான் எழுவதற்குக் காரணமான உன் மாய்மாலப் பரத்தைத்தன்மையைக் காட்டுவதற்காக வந்திருக்கிறதைக் கையும்மெய்யுமாகப் பிடித்துவிட்டேன்!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்