Skip to content

சொல் பொருள்

(பெ) மாட்சிமை, பெருமை, சிறப்பு, சீர்த்தி,

சொல் பொருள் விளக்கம்

மாட்சிமை, பெருமை, சிறப்பு, சீர்த்தி, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Greatness; glory; splendour; excellence; dignity

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பகல் எரி சுடரின் மேனி சாயவும்
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்
எனக்கு நீ உரையாயாய் ஆயினை நினக்கு யான்
உயிர் பகுத்து அன்ன மாண்பினேன் ஆகலின்
அது கண்டிசினால் யானே – நற் 128/1-5

பகற்பொழுதில் எரிகின்ற விளக்கின் ஒளியைப் போல் மேனியழகு மங்கித் தோன்றவும்
பாம்பு கவர்ந்த மதியைப் போள நெற்றியின் ஒளி மறைபடவும்.
எனக்கு நீ கூறினாய் இல்லை, உனக்கு யான்
ஓருயிரை இரு உடம்புகளுக்குள் பிரித்து வைத்தாற் போன்ற சிறப்புற்றவளாதலினால்
நீ மறைத்துவைத்திருப்பதை அறிந்திருக்கிறேன் நான்

மாண்பு இல் கொள்கையொடு மயங்கு துயர் செய்த
அன்பு இல் அறனும் அருளிற்று – ஐங் 394/1,2

மாட்சிமை சிறிதும் இல்லாத நெறிமுறையோடு, மனம் கலங்க இன்னல் செய்த
அன்பே இல்லாத தருமமும் எனக்கு அருள்செய்வதாயிற்று

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *