சொல் பொருள்
(பெ) 1. அழகு, 2. காதல், 3. பெண், பெண்கள்,
வேர்ச்சொல்லியல்
இது mother என்னும் ஆங்கில சொல்லின் மூலம்
இது மாதா என்னும் சமற்கிருத சொல்லின் மூலம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
beauty, love, woman, women
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: போதும் பணையும் போலும் யாழ நின் மாதர் உண்கணும் வனப்பின் தோளும் – நற் 166/3,4 பூக்கின்ற மலரும், மூங்கிலும் போன்ற உன் அழகிய மையுண்ட கண்களும், வனப்புள்ள தோள்களும் பயில் இதழ் மலர் உண்கண் மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்று தாது எரு மன்றத்து அயர்வர் தழூஉ – கலி 103/60-62 நிறைந்த இதழ்களைக் கொண்ட மலர் போன்ற மைதீட்டிய கண்களையுடைய காதலையுடைய மகளிரும் அவரின் கணவர்களும் விருப்பத்துடன் சாணம் மெழுகிய மன்றத்தில் குரவைக்கூத்து ஆடுவதற்காகத் தழுவிக்கொண்டு, ஏதிலார் தந்த பூ கொள்வாய் நனி மிக பேதையை மன்ற பெரிது என்றேன் மாதராய் ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலை மேல் தொய்யில் எழுதுகோ மற்று என்றான் – கலி 111/14-17 யாரோ ஒருவர் கொடுத்த பூவைக் கையில் கொண்டிருக்கிறாய், மிக மிகப் பெரிய பேதையாய் இருக்கிறாயே! என்றேன், “பெண்ணே! வியக்கும் வகையில் பரந்திருக்கும் அழகுத்தேமல் புள்ளிகளை அழகாக உடைய மென்மையான முலைகளின் மேல் தொய்யில் குழம்பால் கோலம் வரையவோ?” என்றான், சாய் இறை பணை தோள் அம் வரி அல்குல் சே இழை மாதரை உள்ளி நோய் விட முள் இட்டு ஊர்-மதி வலவ நின் புள் இயல் கலி_மா பூண்ட தேரே – ஐங் 481 வளைந்து இறங்கிய பருத்த தோள்களையும், அழகிய வரிகளைக் கொண்ட அல்குலையும் கொண்ட, சிவந்த அணிகலன் அணிந்த தலைவியை எண்ணி, அவளின் நோய் தீர, தார்க்குச்சியின் முள்ளால் குத்தி, விரைவாகச் செலுத்து, பாகனே! உன் பறவைகளின் தன்மை கொண்டு விரைந்துசெல்லும் குதிரைகள் பூட்டிய தேரை. உணர்த்த உணரா ஒள் இழை மாதரை புணர்த்திய இச்சத்து பெருக்கத்தின் துனைந்து – பரி 7/36,37 ஊடலைத் தீர்ப்பதற்கு உணர்த்திக்கூறியும் உணராத ஒளிரும் இழையணிந்த பெண்களைச் சேர்வதற்கான எழும் ஆடவரின் ஆசைப் பெருக்கினைப் போல வெள்ளம் பெருகி விரைய,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
இது ஒரு மூலச்சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்