சொல் பொருள்
(பெ) கால எல்லை, அளவு,
வேர்ச்சொல்லியல்
இது metre என்னும் ஆங்கில சொல்லின் மூலம்
இது மாத்ரா என்னும் சமற்கிருத சொல்லின் மூலம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
measure, limit – as of time
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆளி நன் மான் அணங்கு உடை குருளை மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி முலை கோள் விடாஅ மாத்திரை ஞெரேரென தலை கோள் வேட்டம் களிறு அட்டு ஆங்கு – பொரு 139-142 சிங்கம் (ஆகிய)நல்ல விலங்கின், வருத்துதலை உடைய குருளையானது – இளமை(பொங்கும்) தோள்களின் மிகுந்த வலிமையால் செருக்கி, முலையுண்டலைக் கைவிடாத அளவிலே(யே) கடுகப் பாய்ந்து, (தன்)கன்னிவேட்டையிலேயே களிற்றியானையைக் கொன்றாற் போன்று இமைத்தோர் விழித்த மாத்திரை ஞெரேரென குணக்கு எழு திங்கள் கனை இருள் அகற்ற – புறம் 376/7,8 இமைத்த கண் விழிக்கும் அளவிலே விரைவாக கிழக்கேஎழுந்த மதியம் செறிந்திருந்த இருளை நீக்க
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
இது ஒரு மூலச்சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்