Skip to content

சொல் பொருள்

(வி.வே) 1. மாயவனே!, 2. மாநிறத்தவளே!, 3. கருப்பு நிறத்தவளே!,

சொல் பொருள் விளக்கம்

மாயவனே!,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Oh! Lord Vishnu! Oh! woman with a colour as that of a tender mango leaf! Oh! dark coloured woman!

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மாயோய் நின் வயின் பரந்தவை உரைத்தேம் – பரி 3/10

மாயவனே! உன்னிடமிருந்து தோன்றிப் பரவினவை என்று சொன்னோம்

பருவரல் எவ்வம் களை மாயோய் என – முல் 21

துன்பம் தீராமையைப் போக்கு, மாமை நிறத்தையுடையோளே’, என்று

மயில் எருத்து வண்ணத்து மாயோய் மற்று இன்ன
வெயிலொடு எவன் விரைந்து சேறி உது காண் – கலி 108/38,39

மயில் கழுத்தின் நிறத்தையுமுடைய கருப்பழகியே! இந்த
வெயிலில் எங்கே விரைந்து செல்கிறாய்? இங்கே அருகில் பார்!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *