சொல் பொருள்
(பெ) மாமை நிறத்தவள்,
சொல் பொருள் விளக்கம்
மாமை நிறத்தவள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
woman with a colour as that of a tender mango leaf
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளொடு புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர் – நற் 139/7,8 நுனிசுருண்ட செழித்த கூந்தலையுடைய மாமைநிறத்தவளோடு சேர்ந்து இனிமையை அனுபவித்த மலைச்சரிவையுடைய நல்ல ஊரில் வல்லோன் எழுதி அன்ன காண்_தகு வனப்பின் ஐயள் மாயோள் அணங்கிய மையல் நெஞ்சம் என் மொழி கொளினே – நற் 1460/8-11 சித்திரம் வரைவதில் வல்ல ஒருவன் தீட்டிவைத்ததைப் போன்ற காண்பதற்கினிய அழகினையுடைய மெல்லியளாகிய மாமை நிறத்தையுடையவள் வருத்திய மயக்கத்தையுடைய நெஞ்சமே! என் சொல்லை ஏற்றுக்கொள்ள விரும்பினால்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்