சொல் பொருள்
(பெ) 1. இளமை, 2. மாவடு,
சொல் பொருள் விளக்கம்
இளமை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
youth
tender unripe mango fruit
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாழை மட மான் பிணை இயல் வென்றாய் நின் ஊசல் கடைஇ யான் இகுப்ப நீடு ஊங்காய் – கலி 131/12,13 இளமையும், மடமையும் உள்ள பெண்மானின் தன்மையை வென்றவளே! நீ உட்கார்ந்திருக்கும் ஊஞ்சலைத் தள்ளிவிட்டு நான் தாழ்த்தி ஆட்டிவிட, நெடுநேரம் ஆடிக்கொண்டிருப்பாய், மாழை நோக்கின் காழ் இயல் வன முலை – அகம் 116/8 மாவடுப் போன்ற கண்ணினையும் முத்துவடம் அசையும் அழகிய முலையினையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்