சொல் பொருள்
நீரில் உள்ள மீன் போன்றவற்றை, எண்ணெயில் பொரியும் கறி/மீன் துண்டு போன்றவற்றை
வலையால், அரிகரண்டியால் அள்ளு, மொள்ளு, நிரம்பப்பெறு
சொல் பொருள் விளக்கம்
நீரில் உள்ள மீன் போன்றவற்றை, எண்ணெயில் பொரியும் கறி/மீன் துண்டு போன்றவற்றை
வலையால், அரிகரண்டியால் அள்ளு, மொள்ளு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
draw, bail
obtain in large/full measure
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வலைஞர் ————– ——————— ————— பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும் – புறம் 249/3-7 வலையை வைத்து மீன்பிடிப்பவர் ——————— —————— ————– பனையினது நுகும்பை ஒத்த சினை முற்றிய வரால் மீனொடு மாறுபடும், வேல் போன்ற ஒள்ளிய கயலை முகந்துகொள்ளும் நெடுநீர் நிறையகத்து படு மாரி துளி போல நெய் துள்ளிய வறை முகக்கவும் சூடு கிழித்து வாடூன் மிசையவும் – புறம் 386/1-4 மிக்க நீர் நிறைந்த நீர்நிலையின்கண் வீழ்கின்ற மழைத்துளி போல நெய்யில் துள்ளி எழுந்த வறுவல்களை முகந்துண்ணவும் சூட்டுக்கோலால் கிழித்துச் சுடப்பட்ட ஊனைத் தின்னவும் முழங்கு கடல் முகந்த கமம் சூல் மா மழை – நற் 347/1 முழங்குகின்ற கடலிலிருந்து நீரை வாரியெடுத்ததினால் நிறைந்த கருக்கொண்ட கரிய மேகம் நாள் வலை முகந்த கோள் வல் பரதவர் – அகம் 300/1 நாள் காலையிலே வலையினால் மீனை அள்ளிக்கொண்ட மீன் பிடித்தலில் வல்ல பரதவர்கள் கொடுஞ்சி நெடும் தேர் முகக்குவம் எனினே – புறம் 368/4 கொடுஞ்சியொடு கூடிய நெடிய தேர்களை நிறையப் பெற்றால்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்