சொல் பொருள்
முகமூடியை உடைத்தல் – மறைப்பை வெளிப்படுத்தல்
சொல் பொருள் விளக்கம்
முகத்திரையைக் கிழித்தல், மூடு திரையைக் கிழித்தல் என்பவும் இப்பொருளவே. திரையைக் கிழித்தற்கும் இவ்வுடைத்தற்கும் வினை வேறுபாடு உண்டு. அது துணியைச் கிழித்தற்கும் தகட்டை உடைத்தற்கும் உள்ள வேறுபாடாம். வன்மையாக மூடி மறைத்து விட்ட செய்தியையும் ஆழத்துள் ஆழமாகப் புதையுண்ட செய்தியையும் வெளிப்படுத்திக் காட்டல் இதுவாம். இவ்வுடைத்தல் தீமை, கொடுமை ஆகியவை பற்றிய மறைப்பை விலக்குதலேயன்றிப் புகழ் விரும்பார் மறைத்துவிட்ட ஆக்கச் செய்தியை வெளிப்படுத்துதல் அன்றாம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்