சொல் பொருள்
நீர் முகக்கும் வாளி,
வாளி / குடத்தில் முகக்கப்பட்ட நீர்,
முகந்து கொடுக்கப்படும் பொருள்
மிகுதியாகக் கொடுக்கப்படும் பொருள்,
சொல் பொருள் விளக்கம்
நீர் முகக்கும் வாளி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bucket for drawing water
water drawn in a bucket or pot
anything given by a measuring vessel
anything given in large numbers / quantities
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிரறு சில ஊறிய நீர் வாய் பத்தல் கயிறு குறு முகவை மூயின மொய்க்கும் ஆ கெழு கொங்கர் நாடு – பதி 22/13-15 அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிறிதளவு ஊறிய நீரைக் கொண்ட பள்ளத்தில் கயிறுகட்டி மேலிழுத்து நீர் முகந்த பாத்திரத்தைச் சூழ்ந்துகொண்டு மொய்த்துநிற்கும் பசுக்கள் நிறைந்த கொங்கர் நாட்டினை தெண் கண் உவரி குறை குட முகவை – அகம் 207/11 தெளிந்த உவரையுடையதாகிய குறைக்குடமாக முகக்கப்பட்ட நீரை நெடும் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில் பழம் செந்நெல்லின் முகவை கொள்ளாள் கழங்கு உறழ் முத்தமொடு நன் கலம்பெறூஉம் – அகம் 126/10-12 நீண்ட கொடிகள் அசையும் கள் மிக்க தெருவில் பழைய செந்நெல்லை முகந்து தருதலைக் கொள்ளாளாகி கழங்கினை ஒத்த பெரிய முத்துக்களுடன் சிறந்த அணிகளையும்பெறும் வேழ முகவை நல்கு-மதி – புறம் 369/27 களிறுகளாகிய மிகுந்த பரிசிலை நல்குவாயாக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்