சொல் பொருள்
அரும்பு, மொக்குவிடு, குவி, தோன்று, அரும்பு, தயிர் முதலியவற்றின் கட்டி, மொக்குள், நீர்க்குமிழி
சொல் பொருள் விளக்கம்
அரும்பு, மொக்குவிடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bud, fold, appear, show up, bud, Mass, as of curds, bubble
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முகிழ்த்து வரல் இள முலை மூழ்க பல் ஊழ் முயங்கல் இயைவது மன்னோ – அகம் 242/16,17 அரும்பி வருதலையுடைய இளைய முலை மூழ்கிட பலமுறை தழுவுதல் தக்கது முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும் இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும் – சிறு 231,232 முதியோர்க்குக் குவித்த கைகளையுடையோய்’ என்றும், ‘வீரர்க்குத் திறந்த மார்பை உடையோய்’ எனவும், முடிந்ததும் முடிவதும் முகிழ்ப்பதும் அவை மூன்றும் கடந்து அவை அமைந்த கழலின் நிழலவை – பரி 13/47,48 முடிந்துபோனதும், இனி முடியப்போவதும், இப்போது தோன்றியிருப்பதும் ஆகிய மூன்று காலங்களும் கடந்து, அவை பொருந்தப்பெற்ற உன் திருவடிகளின் நிழலில் உள்ளவை; முலையே முகிழ் முகிழ்த்தனவே தலையே கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே – குறு 337/1,2 முலைகள் அரும்பாய் முகிழ்த்தன; தலையின் கிளைத்த கூந்தல்கொத்துக்கள் கீழே விழுந்து தொங்குகின்றன; ஆம்பி வான் முகை அன்ன கூம்பு முகிழ் உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து – பெரும் 157,158 குடைக்காளானுடைய வெண்மையான முகைகளை ஒத்த குவிந்த முகைகளையுடைய உறையினால் கெட்டியாகத் தோய்ந்த இளம் புளிப்பான தயிரைக் கடைந்து, வெண்ணையை எடுத்து, பெயல் துளி முகிழ் என பெருத்த நின் இள முலை – கலி 56/24 மழைநீரின் எழும் மொக்குகள் என்று கூறும்படியாக, பெரியதாய் நிற்கும் உன் இளமையான முலைகள்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்