சொல் பொருள்
பிள்ளைப்பேற்று நிலையில் தோன்றும் அசதி, முடக்கமான இடம்,
சொல் பொருள் விளக்கம்
பிள்ளைப்பேற்று நிலையில் தோன்றும் அசதி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Physical exhaustion, as in confinement, space with bends
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தமிழ்ப்பேரகராதி இந்தப் பொருள் கொள்ளுகிறது. சான்றாக இந்த அடிகளைக் குறிப்பிடுகிறது.. ஊன் பொதி அவிழா கோட்டு உகிர் குருளை மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த துறுகல் விடர் அளை பிணவு பசிகூர்ந்து என – அகம் 147/3-5 தசையின் மறைப்பு நீங்காத வளைந்த நகத்தினையுடைய குட்டிகள் மூன்றை ஒரு சேரப்பெற்ற அசதி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய பாறையின் பிளப்பாகிய குகையிலுள்ளதுமாகிய பெண்புலி பசி மிக்கதாக ந.மு.வே.நாட்டார் இதே அடியின் வரும் இந்தச் சொல்லுக்கு முடக்கமான இடம் என்று பொருள் கொள்வார். தசையின் மறைப்பு நீங்காத வளைந்த நகத்தினையுடைய குட்டிகள் மூன்றை ஒரு சேரப்பெற்றதும், முடக்கமான இடத்திலே ஓய்ந்த பாறையின் பிளப்பாகிய குகையிலுள்ளதுமாகிய பெண்புலி பசி மிக்கதாக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்