சொல் பொருள்
கை, கால் மடங்கிச் செயலிழந்த நிலை, வளைவு,
சொல் பொருள் விளக்கம்
கை, கால் மடங்கிச் செயலிழந்த நிலை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
leg or arm being bent and crippled
bend, curve
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உகு மண் ஊறு அஞ்சும் ஒரு கால் பட்டத்து இன்னா ஏற்றத்து இழுக்கி முடம் கூர்ந்து ஒரு தனித்து ஒழிந்த உரன் உடை நோன் பகடு – அகம் 107/13-15 இடிந்து விழும் மண்ணின் இடையூற்றினை அஞ்சுவதான ஒரே துறையினையுடைய ஓடையிலுள்ள இன்னாததாகிய ஏற்றங்கொண்ட நெறியில் வழுக்கி விழுந்து முடம்பட்டு தன்னந்தனியே ஒழிந்து கிடக்கும் உடல்வலி வாய்ந்த தன்மையுடையன பொறுக்கும் பகட்டினை ஒரு சில மரங்களின் அடிப்பகுதி நேராக மேல்நோக்கிச் செல்லாமல், வளைந்து பக்கவாட்டில் செல்லும். அத்தகைய மரங்களை முடமான மரங்கள் என்கின்றன இலக்கியங்கள். முடம் முதிர் மருதத்து பெரும் துறை – ஐங் 31/3 முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும் – அகம் 91/16 முட காஞ்சி செம் மருதின் – பொரு 189 பெரும் களிறு தொலைத்த முட தாள் ஓமை – நற் 137/7 களரி ஓங்கிய கவை முட கள்ளி – நற் 384/2 கடற்றில் கலித்த முட சினை வெட்சி – குறு 209/5 நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முட தாழை – கலி 133/4 படப்பை நின்ற முட தாள் புன்னை – அகம் 180/13 தொகு முகை விரிந்த முட கால் பிடவின் – அகம் 344/3 முட பனையத்து வேர் முதலா – புறம் 229/3
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்