சொல் பொருள்
முடிச்சுப்போடல் – இல்லாததும் பொல்லாததும் கூறல், திருமணம் செய்தல்
சொல் பொருள் விளக்கம்
மூட்டி விடுதல், மாட்டி விடுதல் போல்வது இம் முடிச்சுப்போடுதல். ஒருவரோடு ஒருவருக்குச் சிக்கல் உண்டாக்கும் செயலில் ஈடுபடுதல் முடிச்சுப் போடலாகும். முடிச்சு அவிழ்க்க வல்லவரிடம், முடிச்சுப் போட முடியாத விழிப்பரிடம் முடிச்சாளர் வேலை நடைபெறாது. எங்களுக்கு முடிச்சுப் போடவா பார்க்கிறாய்? அந்தப் பாய்ச்சல் நடக்காது என்று முகத்தில் கரிபூசிவிடுவர். திருமணம் முடிச்சுப் போடுதல் என்பது தாலிகட்டல், கட்டுக் கழுத்தி, கட்டிக் கொள்ளல் என்பவற்றால் புலப்படும். “மூன்று முடிச்சுப் போடல்” என்பது முன்பொருளுக்கும் பின் பொருளுக்கும் தொடர்பில்லாது விளக்கிக் காட்டும்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்