சொல் பொருள்
விரைந்து செல், விரைவான இயக்கம்
சொல் பொருள் விளக்கம்
விரைந்து செல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
hasten, move quickly, quick movement
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முயல் வேட்டு எழுந்த முடுகு விசை கத நாய் – நற் 252/10 முயல் வேட்டைக்காகப் புறப்பட்டு விரைவாகும் வேகங்கொண்ட சினமுள்ள நாயின் குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக – குறு 189/2 குன்றிலிருந்து விழும் அருவியைப் போல வெள்ளிய தேர் விரைந்து செல்க; பரி முடுகு தவிர்த்த தேரன் எதிர்மறுத்து நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கி சென்றோன் மன்ற அ குன்று கிழவோனே – அகம் 48/20-22 தன் தேரின் குதிரைகளின் வேகத்தைத் தடுத்தவன், எதிர்நோக்கலாக நின் மகளின் மையுண்ட கண்களைப் பலமுறை நோக்கிச் சென்றான், அந்தக் குன்றுக்கு உரியவன்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்