Skip to content

சொல் பொருள்

நீர்நிலைக்கரையில் நீர் அரித்த இடம்,

குறுகலானதும் கோணியதுமான இடம்

சொல் பொருள் விளக்கம்

நீர்நிலைக்கரையில் நீர் அரித்த இடம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

place where water presses against the bank and erodes

narrow winding space

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குமிழி சுழலும் குண்டு கய முடுக்கர்
அகழ் இழிந்து அன்ன கான்யாற்று நடவை – மலை 213,214

நீர்க்குமிழிகள் சுழன்று வருகின்ற ஆழமான பொய்கையின் நீர் அரித்த கரையின்(மறுபக்கத்தில்),
அகழியில் இறங்குவது போன்ற, காட்டாற்று வழித்தடம்

இரவு குறும்பு அலற நூறி நிரை பகுத்து
இரும் கல் முடுக்கர் திற்றி கெண்டும்
கொலை வில் ஆடவர் போல – அகம் 97/4-6

இரவிலே காட்டரண்களிலுள்ளோர் அலற அவர்களைக் கொன்று, தாம் கொண்ட ஆநிரைகளைப் பகுத்துக்கொண்டு
பெரிய கற்பாறையின் முடுக்கிலே தசையினை அறுத்துத்தின்னும்
கொலைத்தொழில் வல்ல வில்லினையுடைய வெட்சி வீரர் போல

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *