சொல் பொருள்
முட்டிக் குனிதல் – பட்டறிவு இல்லாமை
சொல் பொருள் விளக்கம்
உயரங்குறைந்த வாயில்களைக் கடப்பார் புதுவராயின் முட்டிக் கொள்வர். பின்னர்க் குனிந்து செல்லப் பழகிப் போவர். இது முட்டிக் குனிதலாம். இவ்வாறே தீச்சுடும் என்பதை அறியாத குழந்தை தீயைத் தொட்டுச் சுட்டுக் கொண்ட பின்னர் தீச்சுடும் என்றும், அதனைத் தொடுதல் ஆகாது என்றும் தெரிந்து கொள்கிறது. இது பட்டறிவு. குழந்தை நிலையில் சரி. வளர்ந்த நிலையில் இதனால் இன்னது நேரும் என்னும் தெளிவு வேண்டும். அத்தெளிவு இல்லார் முட்டிக்குனிவர்; முட்டிக்குனிதலே வாழ்வாக அவர்களுக்கு இருக்கும். ஒன்றைக் கொண்டேனும் ஒன்றைத் தெளிவாரா? அதுவும் செய்யார். அத்தகையரே முட்டிக் குனிபவருள் முதல்வர் என்க.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்