சொல் பொருள்
மோது, குறைவுபடு, குன்று, தடை, குறைபாடு
சொல் பொருள் விளக்கம்
மோது, குறைவுபடு, குன்று, தடை, குறைபாடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
dash or hit against, be deficient, fall short, obstacle, hindrance, deficiency, shortage
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முட்டுவேன்-கொல் தாக்குவேன்-கொல் ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு ஆஅ ஒல் என கூவுவேன்-கொல் – குறு 28/1-3 தலையைப் பிடித்து முட்டுவேனோ! கையால் தாக்குவேனோ! என்ன செய்வதென்று அறியேன்! நானும் ஏதாவது சாக்குவைத்து ஆவென்றும் ஒல்லென்றும் உரக்கக் கூவுவேனோ! முட்டாது கொடுத்த முனை விளங்கு தட கை துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடும் கோட்டு நளி மலை நாடன் நள்ளியும் – சிறு 105-107 குறையாமல் கொடுத்தவனும், போர்முனையில் விளங்கும் பெருமையுடைய கையினையும், சொட்டும் மழை(எப்போதும்)பெய்யும் (உயர்ச்சியால்)காற்றுத் தங்கும் நெடிய சிகரங்களையுடைய செறிந்த மலைநாட்டையும் உடைய நள்ளியும்; பல் முட்டு இன்றால் தோழி நம் களவே – அகம் 122/23 பல தடைகளையுடையதாகின்றது, தோழி, நமது இந்தக் களவொழுக்கம் மூ_ஏழ் துறையும் முட்டு இன்று போகிய உரை சால் சிறப்பின் உரவோர் மருக – புறம் 166/8,9 இருபத்தொரு வேள்வித்துறையையும் குறை இன்றாகச் செய்து முடித்த புகழ் அமைந்த தலைமையையுடைய அறிவுடையோர் மரபிலுள்ளானே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்