Skip to content

முட்டுக்கை முழங்கை

சொல் பொருள்

முட்டுக்கை – கை எலும்பும் தோள் எலும்பும் முட்டுகிற இடம் முட்டுக்கை.
முழங்கை – மணிக்கட்டு முதல் முட்டுக்கை வரையுள்ள கை முழங்கை.

சொல் பொருள் விளக்கம்

ஈரெலும்புகள் முட்டுகின்ற இடம் முட்டு; இரண்டையும் மூடி இணைப்பது மூட்டு. முட்டுக்கை – முட்டிக்கை எனவும் படும்.

சிறுவர் விளையாட்டுகளில் தோல்வியுற்றவர்க்கு ‘முட்டித் தள்ளும்’ தண்டனை உண்டு. கல்லையோ, குச்சியையோ ஆட்டக் குழிவரை முட்டியால் தள்ளிக்கொண்டு போக வேண்டும் என்பது அது.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *