சொல் பொருள்
முட்டுதல் – ஒன்றையொன்று படுமாறு தலைப்படுதல் முட்டுதலாம்.
மோதுதல் – கீழே வீழ்ந்துபடுமாறு தள்ளுதல் மோதுதலாம்.
சொல் பொருள் விளக்கம்
முட்டுதல் முற்படுவினையும், மோதுதல் பிற்படுவினையுமாம். ‘முட்டித் தள்ளுதல்’ என்பது இவ்வினைச் சொற்பொருளை விளக்கும்.
முட்டுப்பாடாம் வறுமை ‘முட்டுப்பாடு’ எனப்படுவதும் அறிக. ‘முட்டுக்கால் முழங்கால்’ ‘முட்டுக்கை முழங்கை’ என்பவற்றைக் காண்க.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்