சொல் பொருள்
முட்டுமாடு – முன் சீற்றத்தன் (முன்கோபி)
சொல் பொருள் விளக்கம்
முட்டும் மாட்டின் தலையசைவு, கொம்பசைவு கண்டே ஒதுங்கிவிடுவர். “கொம்புளதற்கு ஐந்து முழம்” விலக வேண்டும் என்பது ஒரு பாட்டு. கொம்புள்ள மாடு முட்டுதலுக்கு அஞ்சி ஒதுங்குவது போல முன் சீற்றத்தரைக் கண்டும் அஞ்சுதல் உண்டு. ஆதலால் அவரை முட்டுமாடு என்பர். அதனை அவர் முன்னர்க் கூற முடியுமா? அவர் காது கேட்கவும் கூற முடியுமா? பிறர்க்கு வெளிப்படாத வகையில் ‘முட்டுமாடு’ என்று பெயர் சூட்டிக் கொள்வர். எத்தனை சிறப்புகள் இருப்பினும் முன் சினத்தர் நிலை மதிப்பைக் கெடுத்து விடுதல் வெளிப்படை. “கோபம் உள்ள இடத்தில் தான் குணமிருக்கும்” என்பது ஒப்பேற்றிச் சொல்லாம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்