சொல் பொருள்
முட்டையிடல் – அடங்கிக் கிடத்தல்
சொல் பொருள் விளக்கம்
அடை காத்தல் என்பது போன்றது முட்டையிடல். முட்டைக்கோழி அடையை விட்டு வெளிப்படாது. தீனியும் நீரும் கூடக் கருதாமல் கிடந்த கிடையாய்க் கிடக்கும். அப்படிக் கிடத்தலையோ, தீனும் நீரும் கொள்ளாதிருத்தலையோ குறியாமல் வீட்டுள் அடைந்து கிடத்தலைக் குறிப்பதாக வழங்குவது முட்டையிடலாம். முட்டையிட்ட கோழிபோல வீட்டை விட்டு வெளிப்போகாமல் கிடக்கிறான் என்பது பொருளாம். “அவன் முட்டைக்கோழி; விளையாட வரமாட்டான்” என்பதில் வீட்டுள் அடங்கிக் கிடக்கும் பொருளிருத்தல் அறிக.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்