சொல் பொருள்
(பெ) பழமை
சொல் பொருள் விளக்கம்
பழமை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
oldness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முதை படு பசும் காட்டு அரில் பவர் மயக்கி பகடு பல பூண்ட உழவுறு செம் செய் – அகம் 262/1,2 பழமை மேவிய பசிய காட்டிலே பின்னிய கொடிகளை உழக்கி எருதுகள் பூண்ட பல ஏரால் உழவினைப் பொருந்திய சிவந்த புன்செய் நிலத்தில் இந்த முதை என்ற சொல் பெரும்பாலும் சுவல் அல்லது புனம் என்ற சொல்லுக்கு அடையாக வருகிறது. சுவல் என்பது மேடான நிலம். முதை சுவல் கிளைத்த பூழி மிக பல – நற் 389/9 முதை சுவல் கலித்த முற்றா இளம் புல் – குறு 204/3 முதை சுவல் கலித்த மூரி செந்தினை – அகம் 88/1 முதை சுவல் மூழ்கிய கான் சுடு குரூஉ புகை – அகம் 359/14 முதை சுவல் கலித்த ஈர் இலை நெடும் தோட்டு – அகம் 393/4 முதைப்புனம் என்பது நெடுங்காலம் பயன்பாட்டில் உள்ள நிலம். முதை புனம் கொன்ற ஆர் கலி உழவர் – குறு 155/1 முதை புனம் காவலர் நினைத்திருந்து ஊதும் – அகம் 94/10
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்