சொல் பொருள்
முத்தமிடு, சிப்பியிலிருந்து கிடைப்பது, கண்ணீர்த்துளி
சொல் பொருள் விளக்கம்
முத்தமிடு, சிப்பியிலிருந்து கிடைப்பது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
kiss, pearl, tears
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புதல்வர் பூ கண் முத்தி மனையோட்கு எவ்வம் கரக்கும் பைதல்மாக்களொடு – புறம் 41/14,15 தம் பிள்ளைகளுடைய பூப்போலும் கண்ணை முத்தங்கொண்டு, தம் மனைவியர்க்குத் தமது வருத்தம் தோன்றாமல் மறைக்கும்துன்பத்தையுடைய ஆடவரோடு முத்து படு பரப்பின் கொற்கை முன்துறை – நற் 23/6 முத்துக்கள் விளையும் கடற்பரப்பினையுடைய கொற்கை நகரத்துத் துறையின் முன் பூ போல் உண்கண் புலம்பு முத்து உறைப்ப – முல் 23 பூப்போலும் மையுண்ட கண்கள் (தாரையாகச் சொரியாது)தனித்த கண்ணீர் முத்து துளிப்ப
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்