சொல் பொருள்
(பெ) முழங்கை முதல் மணிக்கட்டு வரையில் உள்ள பகுதி,
சொல் பொருள் விளக்கம்
முழங்கை முதல் மணிக்கட்டு வரையில் உள்ள பகுதி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
forearm
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆடு அமை பணை தோள் அரி மயிர் முன்கை நெடு வரை மிசைய காந்தள் மெல் விரல் – பொரு 32,33 அசைகின்ற மூங்கில் (போன்ற)பெருத்த தோளினையும், ஐம்மை மயிரினையுடைய முன்கையினையும், நெடிய மலையின் உச்சியிடத்தனவாகிய காந்தள் (போலும்)மெல்லிய விரலினையும், பொலம் தொடி தின்ற மயிர் வார் முன்கை வலம்புரி வளையொடு கடிகை_நூல் யாத்து – நெடு 141,142 (முன்பு)பொன் வளையல்கள் (அழுத்தித்)தழும்புண்டாக்கிய மயிர் ஒழுங்குபட்ட முன்கையில் வலம்புரிச் சங்கு வளையல்களோடு காப்புக்கயிறைக் கட்டி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்