சொல் பொருள்
(வி) நெருங்கியிரு
சொல் பொருள் விளக்கம்
நெருங்கியிரு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be close
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முய பிடி செவியின் அன்ன பாசடை கய கண கொக்கின் அன்ன கூம்பு முகை கணை கால் ஆம்பல் அமிழ்து நாறு தண் போ – நற் 230/1-3 நெருக்கமாய்க்கிடக்கும், பெண்யானையின் காதைப் போன்ற பசிய இலைகளையும், குளத்தில் கூட்டமாய் நிற்கும் கொக்குகளைப் போன்ற குவிந்த மொட்டுக்களையும் திரட்சியான தண்டினையும் உடைய ஆம்பலின் தேன் மணக்கும் குளிர்ந்த விரிநிலை மலரானது முயத்தல் நெருங்கல். முயா என்னும் குறியதன் இறுதிச் சினை கெட்டு உகரம் பெறாது நின்றது. – பின்னத்தூரார் உரை விளக்கம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்