சொல் பொருள்
(மு.ஒ.வி.மு) முயல்கிறாய்
சொல் பொருள் விளக்கம்
முயல்கிறாய்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
you are trying
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆற்றல் நோய் அட இவள் அணி வாட அகன்று நீ தோற்றம் சால் தொகு பொருள் முயறி-மன் முயல்வு அளவை நாற்றம் சால் நளி பொய்கை அடை முதிர் முகையிற்கு கூற்று ஊழ் போல் குறைபடூஉம் வாழ்நாளும் நிலையுமோ – கலி 17/9-12 ஆற்றல் மிக்க காம நோய் இவளை வருத்த, இவளின் அழகு வாடிப்போக, இவளை விட்டுப் பிரிந்து நீ பெருமை தரும் தோற்றம் கொண்ட அரச செல்வத்தைப் பெற முயலுகின்றாய்! உன் முயலுதல் தொடரும்வரை மணம் மிக்க, நீர் நிறைந்த குளத்தில் இலைகளுக்கு மேல் உயர்ந்து நிற்கும் மொட்டுகளுக்கு மலர்ச்சியே அதற்குக் கூற்றமாக இருப்பது போல், குறைந்துகொண்டுவரும் இவள் கற்பு வாழ்க்கை நிலைபெறுமோ?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்