சொல் பொருள்
முயலுக்கு மூன்றுகால் – சொன்னதை நிலைநாட்டல்
சொல் பொருள் விளக்கம்
முயலின் கால் நாலே, கால் ஒன்றை இழந்த ஒரு முயலைப் பார்த்தவன் ‘முயலுக்கு மூன்று கால்’ என்றான். எத்தனை பேர் மறுத்து நான்கு கால் எனக் கூறினும் தான் கூறியதே கூறினான். அதனால் சொன்னதையே நிலைநாட்ட நினைவாரை ‘முயலுக்கு மூன்றுகால்’ எனக் கூறுதல் வழக்காயிற்று. “வாதத்திற்கு மருந்து உண்டு; பிடிவாதத்திற்கு மருந்து உண்டா?” என்பது பிடிவாதரின் மாறாத் தன்மையைக் காட்டுவதாம். “நான் என்னென்னவோ சொன்னேன்; அவன், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று பேசுகிறான்; அவனை எப்படித் திருத்துவது” என்பதில் பிடிவாதப் பொருள் புலப்படும்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்