சொல் பொருள்
(பெ) 1. முரல் என்ற ஒலிப்பின் அடியாக வந்த பெயர்ச்சொல், ஒலி, பாட்டு, 2. கயிறு, கயிறாகத்திரித்தல்,
சொல் பொருள் விளக்கம்
முரல் என்ற ஒலிப்பின் அடியாக வந்த பெயர்ச்சொல், ஒலி, பாட்டு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sound, song,
cord, twisting into a rope
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நரம்பின் முரலும் நயம் வரு முரற்சி விறலியர் வறும் கை குறும் தொடி செறிப்ப – மது 217,218 (யாழ்)நரம்பைப் போல் பாடும் நயப்பாடு தோன்றும் பாட்டினையுடைய விறலியரின் வெறுமையான கைகளில் குறிய வளைகளைச் செறித்துச்சேர்க்க தொடிமகள் முரற்சி போல் தும்பி வந்து இமிர்தர – கலி 36/4 வளையணிந்த விறலியின் வாய்ப்பாட்டு போல தும்பிகள் மலரைச் சுற்றி ரீங்காரிக்கவும் கரும் கால் வேங்கை செம் வீ வாங்கு சினை வடு கொள பிணித்த விடு புரி முரற்சி கை புனை சிறு நெறி வாங்கி – நற் 222/1-3 கருமையான அடிமரத்தையுடைய வேங்கையின் செம்மையான மலர்களையுடைய வளைந்த கிளையில், தழும்பு உண்டாகுமாறு இறுகக் கட்டிய சற்றுத்தளர்ந்த முறுக்கினைக் கொண்ட கயிற்றாலாகிய கையால் செய்யப்பட்ட சிறிய வளைவைக் கொண்ட ஊஞ்சலை இழுத்து வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன் கூந்தல் முரற்சியின் கொடிதே – நற் 270/9,10 பகைவரை ஓட்டிய ஏந்திய வேற்படையை உடைய நன்னன் பகைவரின் உரிமைமகளிரின் கூந்தலைக் கயிறாகத் திரித்த கொடுமையினும் கொடியது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்