சொல் பொருள்
(வி) 1. அழி, சிதைந்துபோ, 2. முறி, 3. கசங்கு,
சொல் பொருள் விளக்கம்
அழி, சிதைந்துபோ,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
perish, be ruined, break, be crumpled
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஓரி முருங்க பீலி சாய நன் மயில் வலைப்பட்டு ஆங்கு யாம் உயங்கு-தொறும் முயங்கும் அறன் இல் யாயே – குறு 244/4-6 தலைக்கொண்டை சிதையும்படியும், தோகை மெலியும்படியும், நல்ல மயில் வலையில் அகப்பட்டதைப் போல், நாம் வருந்திப் புரளும்தோறும் தழுவிக்கொள்கிறாள் அறப்பண்பு இல்லாத எம் அன்னை பனைமீன் வழங்கும் வளை மேய் பரப்பின் வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ இதை புடையூ கூம்பு முதல் முருங்க எற்றி காய்ந்து உடன் கடும் காற்று எடுப்ப கல் பொருது உரைஇ நெடும் சுழி பட்ட நாவாய் போல – மது 375-379 பனைமீன்கள் உலாவும் சங்கு மேய்கின்ற கடலிடத்தில், இறுகும் பிணிப்பினையுடைய வலிமையான (பாய் கட்டின)கயிற்றை அறுத்துப், பாயையும் பீறிப் பாய்மரம் அடியில் முறியும்படி மோதி வெகுண்டு ஒருசேரக் கடிய காற்று எடுக்கையினால் பாறைக் கற்களில் மோதி உராய்ந்து, நெடிய சுழற்காற்றில் அகப்பட்ட மரக்கலத்தைப் போல முருங்கா கலிங்கம் முழுவதும் வளைஇ – அகம் 136/20 கசங்காத புத்துடையால் உடல் முழுவதும் போர்த்தியதால்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்