சொல் பொருள்
(பெ) 1. மயிலிறகின் அடியிலுள்ள வெண்குருத்து, 2. குருத்து,
சொல் பொருள் விளக்கம்
மயிலிறகின் அடியிலுள்ள வெண்குருத்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the white tender bottom of a quill
the white soft bottom of the stem of grass plants
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முருந்து என திரண்ட முள் எயிற்று துவர் வாய் – அகம் 179/11 மயிலிறகின் அடியெனத் திரண்ட முள் போலும் கூரிய பற்களையும், சிவந்த வாயினையும் அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் – அகம் 62/1,2 பள்ளத்துநீரில் வளரும் பைஞ்சாய்க் கோரைத் தண்டின் அடிப்பகுதியை ஒத்த ஒளி சிறந்துவிளங்கும் பற்கள் பொருந்திய பவளம் போன்ற வாயினையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்