Skip to content

சொல் பொருள்

(பெ) 1. புன்னகை, 2. பல்,

சொல் பொருள் விளக்கம்

புன்னகை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

smile, tooth

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

முல்லை, முகை முகம் திறந்து அன்ன முறுவலும் கடிகல்லாய் – கலி 118/19,20

முல்லையின், மொட்டு தம் முகத்தைத் திறந்தது போன்ற இனிய முறுவலை அழிப்பதில்லை;

முளை நிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல்
குறி நீ செய்தனை என்ப அலரே – ஐங் 369/2,3

மூங்கிலின் முளை போன்ற வரிசையான பற்களுடைய ஒருத்தியை நேற்று நீ குறிப்புக்காட்டி அழைத்தாய் என்று ஊரே பேசும் பேச்சு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *