சொல் பொருள்
1. (வி) காய்ந்துபோ, உலர், வற்று, 2. முற்று, உறை, தோய், 3. வேகு, கருகு, தீய்
சொல் பொருள் விளக்கம்
காய்ந்துபோ, உலர், வற்று.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
dry
mature, curdle
burn, be scotched
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முளி கழை இழைந்த காடு படு தீயின் – மலை 248 (முற்றிக்)காய்ந்துபோன மூங்கில்கள் (ஒன்றோடொன்று)உரசிக்கொண்டதால் காட்டில் உண்டான தீயில் முளி கொடி வலந்த முள் அரை இலவத்து – நற் 105/1 காய்ந்த கொடிகள் வலப்பக்கமாய்ச் சுற்றி வளைத்த முள்ளுள்ள அடிமரத்தைக்கொண்ட இலமரத்தின் பயம் கெழு மா மழை பெய்யாது மாறி கயம் களி முளியும் கோடை ஆயினும் – புறம் 266/1,2 பயன் பொருந்திய பெரிய முகில் பெய்யாதொழிதலால் நீர்நிலைகள் களியாய் வற்றிப்போகும் கோடைக்காலமாயினும் கொல் வினை பொலிந்த கூர் வாய் எறி_உளி முகம் பட மடுத்த முளி வெதிர் நோன் காழ் – குறு 304/1,2 கொல்லன் தொழிலால் பொலிவுபெற்ற கூரிய வாயையுடைய எறியுளி முகத்தில் படும்படி கட்டப்பட்ட முற்றிய மூங்கிலின் வலிமையுள்ள கழியை முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் – குறு 167/1 முற்றிய தயிரைப் பிசைந்த காந்தள் போன்ற மெல்லிய விரல்களை நெடும் கழை முளிய வேனில் நீடி – ஐங் 322/1 உயர்ந்த மூங்கில்கள் கருகிப்போகுமாறு வேனல் நீண்டு மூ வகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய மாதிரம் அழல எய்து – பரி 5/25,26 பொன், வெள்ளி, இரும்பு ஆகிய மூன்று வகையான கடத்தற்கரிய திரிபுரக் கோட்டைகளை ஒரு தீக்கணையால் வேகும்படியும், திக்கெல்லாம் பற்றியெரியும்படியும் எய்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்