Skip to content

முள் முடல்

சொல் பொருள்

முள் – வேலமரம் ஒட்டடை மரம் இவற்றின் கிளை அல்லது படல்.
முடல் – காய்ந்த விறகு.

சொல் பொருள் விளக்கம்

சிற்றூர்களில் ‘முள்ளும் முடலும்’ எரிபொருளாகக் கொள்வர். முள் என்பது முட்படலைக் குறித்தது. கவைக் கோலால் முட்படல்களை குத்தித் தூக்கிக் கொண்டு வருவது வழக்கம். வெளுப்புத் தொழிலுக்கு ஆவி வைப்பதற்கு ‘முள்முடல்’ கொணர்வது வழக்கம். ‘முடல்’ – ‘முடலை’ எனவும் படும். ‘முடலைவிறகு’ என்பது மணிமேகலை. ஒழுங்கற்ற வடிவும் காய்வும் உடையது முடலை.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *