சொல் பொருள்
மூக்கறுத்தல் – இழிவுறுத்தல்
சொல் பொருள் விளக்கம்
இடைக்காலப் போராட்டங்களுள் மூக்கறுப்புப் போராட்டம் ஒன்று. மைசூர் மன்னர் படைஞர் மூக்கை முகவை அரசர் படைஞர் திருமலை மன்னருக்காக அறுத்த செய்தி வரலாற்றில் உண்டு. இராமகாதையில் மூக்கறுப்புப் போர் தொடங்கி விட்டமை உலகறிந்த செய்தி. மூக்கை அறுத்தல் இழிவுபடுத்துதல் பொருளது. காதறை, மூக்கறை என ஆக்குவது வாழ்நாளெல்லாம் காணுவார் கண்ணுக் கெல்லாம் காட்சி தருவன வல்லவோ! சொல்லாற்படுத்தும் இழிவு தன் மனத்து வடுவாம். இவ்விழிவோ காண்பார்க்கெல்லாம் இழிவைப் பரப்பும் விளம்பரப் பறையாம் அன்றோ! இவ் வழக்கால் மூக்கறுத்தல் என்பதற்கு இழிவுறுத்தல் பொருள் தோன்றிற்றாம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்