சொல் பொருள்
மூச்சுவிட மறத்தல் – சாதல்
சொல் பொருள் விளக்கம்
பேச மறத்தல் என்பது போன்ற வழக்கே மூச்சுவிட மறத்தல் என்பதாம். மூச்சே உயிர், மூச்சு அடங்குதல் உயிர் போதலாம். ஒடுக்கம் அடக்கம் என்பவும் இறப்பை உணர்த்துதல் அறிக. மூச்சு நின்று போனது என்பதை அவர் செயலாக்கி மூச்சுவிட மறந்து விட்டார் என வழக்கில் உள்ளதாம். மூச்சையடக்கிப் பயிற்சி செய்தல், மூச்சை அடக்கி மூழ்குதல் என்பன போல்வதன்றி முற்றாக மூச்சு நின்று போதலே இது என்க. “காயமே பொய்யடா, காற்றடைத்த பையடா” என்பது மூச்சுக் காற்றால் இயலும் உடலியல் கூறுகின்றதாம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்