சொல் பொருள்
மூட்டிவிடுதல் – கோள் கூறல்
சொல் பொருள் விளக்கம்
இரு பக்கத்தை இணைத்து ஒன்றாக்கல் இயைத்தல், இசைத்தல் என்றெல்லாம் வழங்கும். அவை ஒன்றுபடுத்தல் பொருள். இது ஒன்றாக இருந்தவரை இரண்டாக்கி நான்காக்கிப் பிரித்து வைப்பதாம். அடுப்பு மூட்டல், நெருப்பு மூட்டல், தீ மூட்டல், எரி மூட்டல் என்பன போல இம் மூட்டல் சினத்தையும் மூண்டெழச் செய்து அதனால் பலப்பல சிதைவுகளுக்கும் சிக்கல்களுக்கும் ஆட்படுத்துதலாம். மூட்டி விடுதல் மாட்டிவிடுதல் என்பனவெல்லாம் கெடுவழிப் பிறந்த கேடர் கைப்பொருள்கள். “மாட்டுவதில் பெரிய ஆள்” என்னும் வழக்கில் உள்ள பெருமையின் சிறுமை வெளிப்படை.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்