சொல் பொருள்
பழங்குடி, பழமையான் வீடு, பழமையான மறக்குடி
சொல் பொருள் விளக்கம்
பழங்குடி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
ancient family, very old house, Ancient warrior-tribe
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மூதில் அருமன் பேர் இசை சிறுகுடி – நற் 367/6 மூதில் மகனாகிய அருமன் என்பவனின் பெரும்புகழ்பெற்ற சிறுகுடி என்ற ஊரைப் போன்ற மூதில் – தொல்குடி என்னும்பொருட்டு – ஔவை.சு.து.உரை விளக்கம். சிவந்த காந்தள் முதல் சிதை மூதில் புலவு வில் உழவின் புல்லாள் வழங்கும் புல் இலை வைப்பில் – பதி 15/11-13 சிவந்த காந்தள் வேரொடு காய்ந்தழிந்திருக்கும் பாழ் வீடுகளில் புலால் நாறும் வில்லேந்தி உயிர்க்கொலை புரியும் புல்லிய மறவர் உறையும் பனையோலைகளே வேய்ந்த ஊர்களையுடைய ஔவை.சு.து.உரை மூதில் பெண்டிர் கசிந்து அழ நாணி – புறம் 19/15 முதிய மறக்குடியில் பிறந்த பெண்டிர் இன்புற்று உவகையால் அழ ஔவை.சு.து.உரை கெடுக சிந்தை கடிது இவள் துணிவே மூதில் மகளிர் ஆதல் தகுமே – புறம் 279/1,2 இவளது சிந்தை கெடுக, இவளது துணிவு அச்சம்பொருந்தியதாகவுள்ளது இவள் முதிய மறக்குடியில் பிறந்த மகளாமெனல் தக்கதே ஔவை.சு.து.உரை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்